பிஸ்டலுக்கு பிரியாவிடை

ஆதிக்காலம் முதலே மனித உயிரை மருத்துவம் எப்படி காத்ததோ அதே அளவு ஆயுதங்களும் மனித உயிரை காப்பாற்றியுள்ளது. மிருகங்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஆயுதம் பேருதவியாக இருந்தது. கற்காலத்தில் தொடங்கிய இந்த ஆயுத கலாச்சாரம் மேன் மேலும் விரிவடைந்து தற்சமயம் துப்பாக்கி, வெடிக்குண்டு, பீரங்கி என வளர்ந்துள்ளது.

ஆயுதம் உருவானதற்கான நோக்கம் என்னவோ பாதுக்காப்பிற்க்காக தான் இருந்தது. ஆனால் தற்சமயம் அது பழி வாங்குவதற்கும் வன்முறையை வளர்க்கவும் மிக பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இப்படியாக கற்களில் ஆரம்பித்த இந்த ஆயுத கலாச்சாரம் உலோகங்களாக மாறிய போதே வாள்களும்,ஈட்டிகளும் மிருகங்களுக்கு பதில் மனிதனை பதம் பார்க்க தொடங்கின. போருக்கும் நில ஆதிக்கத்துக்கும் மிகவும் உதவின. ஆனால் எப்போது வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதோ அன்று மனித இனத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது. மனித வலிமை , நாட்டின் வலிமை என்பது ஆயுதங்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. நில கையகபடுத்துவதற்கு துப்பாக்கியை போன்றதொரு துணைவன் மிகவும் உதவியாக இருந்தது. செவ்விந்தியர்களையும் கறுப்பின மக்களையும் கொன்று குவித்த அமெரிக்கர்களின் துப்பாக்கி குண்டுகள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவை. கற்களில் ஆயுதம் செய்து வைத்திருந்த செவ்விந்தியர்களுக்கு துப்பாக்கி முன் தன் உயிரை கொடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை. இப்போது வரை அமெரிக்காவில் மிகவும் எளிதாக ஒரு பிஸ்டல் வாங்க முடியும். எனவே அடிமைகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மெல்ல அமெரிக்கர்களில் தலை பக்கம் திரும்பியது. வஞ்சம் தீர்க்க ஒரு மருந்தாக மனிதனுக்கு ஆயுதம் மாறியபோது துப்பாக்கியின் உபயோகமும் மாறி போனது.

இந்த வன்மத்தையும் இரத்ததையும் துப்பாக்கியின் சத்தத்தையும் நிறுத்த தன் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட ஒரு கண்வானின் கதைதான் பிஸ்டலுக்கொரு பிரியாவிடை நீண்டதொரு ஆயுத வரலாற்றில் மனிதனை அடக்கி ஆயுதம் வளர்ந்துவிட்ட போது ஆயுதங்களை எதிரித்து நிற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய கதாநாயகனின் கதையிது.

Leave a comment

Blog at WordPress.com.

Design a site like this with WordPress.com
Get started