ஆறு பக்கத்தில் உள்ள ஊரில் வாழும் வாழ்க்கையை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

ஆறு என்பது சாதரண விஷயமல்ல. மனித இனமான சேப்பியன்ஸ் நிரந்தர குடிகளாக தங்கிய ஒவ்வொரு இடமும் ஆற்றுக்கு அருகில்தான் இருந்தது. வரலாற்றில் முதலில் உருவான ஊர்கள் எல்லாம் ஆற்றுக்கு அருகில் தான் மனிதன் முதன் முதலில் செய்த தொழில், கால்நடைகளை வளர்ப்பதும் விவசாயம் செய்வதும் தான் அப்படி விவசாயம் செய்யும் மனிதன் தனக்கு மிகப்பெரும் தேவையான நீர்க்காக எப்போதும் ஆற்றுக்கு அருகிலேயே குடியிறுப்பை உருவாக்கினர்.

எனது ஊர் பாமணி ஆற்றை மையமாக கொண்டு உருவாகிய மன்னார்குடி எனது ஊரிலிருந்து சுற்றி 100 கிலோ மீட்டருக்கு உள்ள அனைத்து மக்களின் வாழ்வாதாரம் பாமணி ஆறு. இது காவெரியில் இருந்து பிரிந்து வரும் ஆறாகும். காவெரியில் தண்ணீர் விடும்போதுதான் எங்கள் ஆற்றில் தண்ணீர் வரும். நான் எங்கள் ஆறு என்று அதை உரிமை கொண்டாடும் அளவு என் வாழ்க்கையோடு கலந்தது பாமணி ஆறு.

நீங்கள் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்தால் உங்களால் ஒருபோதும் வாழமுடியாத ஒரு அழகான குழந்தை வாழ்க்கையை நான் வாழ்ந்தேன். சரி கட்டுரைக்குள் வருவோம்.

பாமணி ஆற்றுக்கு அருகே இருக்கும் சொற்பமான தெருக்களில் எனது தெருவும் ஒன்று . வருடா வருடம் ஆடி பெருக்கு என்றால் எங்களை கையில் பிடிக்க முடியாது நாங்கள் ஒரு 6 பேர். அந்த 6ல் எனது அண்ணன் மார்களும் அடக்கம். ஆடி பெருக்குக்கு எல்லோரது வீட்டிலும் சக்கரை பொங்கல், ஊற வைத்த பச்சரிசி, நறுக்கிய பழங்கள் என கை மாறி கொண்டிருக்கும்.

எங்களுக்கு அதை விட மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ஆடி பெருக்கில் ஆற்றில் சில்லறை காசுகள் போடுவர் . அதை எடுப்பது தான் எங்களது முக்கிய வேலையே .

அதே போல் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் எங்கள் தெரு நீச்சல் வீரர்களை கையில் பிடிக்க முடியாது. நாங்கள் அதிலே இன்னொரு குழு உள்ளோம் மீன் வேட்டையர்கள். விடுமுறை நாள் வந்துவிட்டால் எங்கள் முழு நேர வேலையே மீன் பிடிப்பது தான்.

தண்ணீர் இல்லாத காலங்களில் ஆறுதான் எங்கள் கிரிகெட் மைதானம். கிரிக்கெட் விளையாடியே சோர்ந்து போவோம்.

சூரியன் உதிப்பதும் சந்திரன் உதிப்பதும் எங்களுக்கு எப்போதும் ஆற்றில் தான்

வீட்டுக்கு பின்னால் சுத்தமான காற்று சல சல வென வீசும் நெல் வயல்கள். வயலுக்கு அருகே மாமரம் உள்ளது. மே மாதம் முழுவதும் அந்த மாமரம் தான் எங்களது இலக்கு . ரொம்ப புளிப்பான மாங்காய்கள் என்றாலும் திருடி திண்பதும் ஒரு சாகசம் தானே .

போர்செட் குளியல் என்றால் என்ன தெரியுமா ? வயல்களில் போர் மூலம் வரும் தண்ணீரில் குளிப்பதுதான் போர்செட் குளியல். எங்கள் ஊரில் போர்செட் குளியல் குளிக்க எந்த தடையும் கிடையாது. எந்த விவசாயிகளும் திட்ட மாட்டார்கள்

அப்படியெல்லாம் வாழ்ந்த எங்கள் ஊர் இப்பொழுது காவெரியில் தண்ணீர் வராமல் போனதால் சில வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மட்டுமே உள்ளது. இந்த ஆடி பெருக்காவது தண்ணீர் வராதா என எங்கள் ஊர் மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.

Leave a comment

Blog at WordPress.com.

Design a site like this with WordPress.com
Get started