டார்க் நெட் (இருள் இணையத்தின் வரலாறு)
வினோத் ஆறுமுகம்
முழு புத்தகத்தையும் படிக்க படிக்க ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற அனுபவம். டார்க் நெட் பற்றி பெரிதாக தொழில்நுட்பம் குறித்து அறியாதவர்கள் கூட எளிமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
நாம் பயன்படுத்தும் இணையத்தில் நாம் பயன்படுத்தும் டேட்டாக்கள் எல்லாம் சேர்த்தால் 10 சதவீதம்தான் இருக்கும். மீதம் 90 சதவீத டேட்டாக்கள் மறைக்கப்பட்டுள்ளன. அப்படியான இருள் இணையத்தைதான் டார்க் நெட் என அழைக்கின்றனர்.
பொதுவாக நாம் இணையத்தில் தேடும் அனைத்து விஷயங்களும் சேமிக்கப்படும். நமது ஐபி முகவரிதான் நம்முடைய ஐடி கார்டாக இணையத்தில் இருக்கும். இண்ணார்தான் இதை தேடுகிறார் என்பதை ஐபி வைத்து கண்டறிவர். நாம் பயன்படுத்தும் வலைத்தளங்கள் தேடுதல்கள் குறித்த ஹிஸ்ட்ரி, குக்கி டேட்டாக்களை அடிப்படையாக கொண்டுதான் அதை சார்ந்த விளம்பரங்களை நமக்கு வலைத்தளங்கள் அளிக்கின்றன.
இப்படி ஒரு மூன்றாவது கண் உங்களை எப்போதும் இணையத்தில் நோட்டமிட்டு கொண்டிருக்க, அதுக்கே டகுள் பாட்ஷா வேலை காட்டிவிட்டு உங்கள் அடையாளத்தை மறைத்து இணையத்தை பயன்படுத்தும் முறைதான் டார்க் வெப்.
அடிப்படையில் அனைவரும் டார்க் வெப் ஒரு மோசமான விஷயம். ஹேக்கர்களும் ட்ரக் டீலர்களும் உலாவும் பகுதி என நினைத்தாலும் கூட உண்மையில் அது அப்படியில்லை. இந்த புத்தகம் படிக்கும் வரை நானும் டார்க் நெட்டை அப்படிதான் நினைத்து கொண்டிருந்தேன் அது வேறு விஷயம்.
அதே சமயம் ட்ரக் டீலிங், ஹேக்கிங் சேவைகள் போன்றவையும் டார்க் நெட்டில் நடக்காமல் இல்லை. ஆனால் டார்க் நெட் என்பது சுதந்திரமாக இணையத்தை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. டார்க் நெட் ரன் ஆக உதவி புரியும் தன்னார்வலர்களில் அமெரிக்க ராணுவமும் உள்ளது என்பது கொசுறு செய்தி.
அதே போல கோடி கணக்கில் லாபம் ஈட்டிய பல மோசடிகளை பார்த்திருப்போம். ஆனால் அமேசான் போல டார்க் நெட்டில் ஒரு ஆள் வலைத்தளத்தை உருவாக்கி அதில் செம்மையா சம்பாதித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அமேசான் போல பாத்திரம், மொபைல் போன் விற்கும் தளம் அல்ல. மாறாக துப்பாக்கி, போ.தை பொருளில் துவங்கி, உடல் பாகங்கள் வரைக்கும் விற்கும் தளம், சும்மா கோடியில் புரண்ட அந்த நபர் ஒரு இமெயில் மாட்டிய சுவாரஸ்யமான கதையையும் இந்த புத்தகத்தில் படிக்க முடியும்.
சிறப்பான புத்தகம் வாய்ப்புள்ளவர்கள் படித்து பார்க்கவும்!..


Leave a comment