
CBS எனப்படும் இணையத்தள தொடர் வெளியிடும் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவியல் புனைகதை தான் அண்டர் தி டோம்.
உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் அவர்கள் எழுதிய அண்டர் தி டோம் என்ற நாவலை திரைக்கு கொண்டு வர செய்த முயற்சியே இந்த தொடர் எனலாம்.
இதில் முக்கிய நிர்வாக தயாரிப்பாளராக ஜுராசிக் பார்க் புகழ் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் அவர்களும், தயாரிப்பாளராக இந்த கதையின் ஆசிரியர் ஸ்டீபன் கிங் அவர்களும் உள்ளார்கள்.
கதைகரு:
மக்கள் வாழும் ஒரு நகரில் கண்ணுக்கு தெரியாத மர்மமான கண்ணாடி போன்ற ஒரு கோளம் அந்த நகரை சுற்றி உருவாகிறது. இதனால் யாரும் கோளத்தை கடந்து வெளியே செல்லவும் முடியாது. வெளியே உள்ளவர்கள் நகருக்குள் வர முடியாது. என்கிற நிலை ஏற்படுகிறது. அதற்குள் ஊருக்குள் சில மர்மமான விஷயங்களும் நடக்கிறது. உணவு, குடிநீர் , வாகனங்களுக்கு எரிவாயு, நோயாளிகளுக்கு மருந்துகள் என எதுவும் கிடைக்காமல் மொத்த ஊரும் வெளி தொடர்பு அற்று அந்த கோளத்தில் மாட்டிக்கொள்கிறது
அந்த கோளம் எப்படி உருவானது, இந்த ஊரில் நடக்கும் மர்மங்களுக்கும் இந்த திடீர் கோளத்திற்கும் என்ன தொடர்பு, அந்த கோளம் உடைப்படுமா ? அல்லது அதில் உள்ள மக்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதே கதை. இதை முக்கியமான சில கதாபாத்திரங்களை கொண்டு சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார்கள். கதையானது முதல் எபிசோடில் முதல் 10 நிமிடங்களிலேயே ஆரம்பித்து விடுவதால் தொடரை பார்க்க தொடங்கிவிட்டால் முடியும் வரை நம்மை பார்க்க வைத்துவிடும்.

ஆனால் இந்த தொடரில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் இந்த தொடர் 2013 ல் முதல் அத்தியாயமும் 2014 ல் இரண்டாம் அத்தியாயமும் 2015 ல் மூன்றாம் அத்தியாயமும் வெளியான நிலையில் CBS நிறுவனம் BBC என்ற நிறுவனத்திடம் 4 வது அத்தியாயத்தை எடுக்கும் பொறுப்பை கொடுத்தது. ஆனால் செலவு காரணமாகவும் அதிகமாக வரவேற்பு இல்லாத காரணத்தாலும் 3 வது அத்தியாயத்திற்கு பிறகு அண்டர் தி டோம் எடுக்கப்பட வில்லை.
ஆனாலும் இந்த 3 அத்தியாயமும் மிகவும் சுவாரஸ்யமாக வே இருந்தாலும் மக்களிடம் இது வரவேற்பை ஏன் பெறவில்லை என தெரியவில்லை.
அந்த தொடரை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்
Exclusive Preview :


Leave a comment